Wednesday, October 24, 2018

நாணயப் பெறுமதி வீழ்ச்சிக்கு புதிய தீர்வு – அமைச்சர் மங்கள யோசனை

October 25, 2018

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு, எம்மைப் போன்ற ஏனைய நாடுகளையும் ஒன்றிணைத்து மாநாடொன்றை நடத்துவதற்கான ஆலோசனையொன்றை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில்  ஜீ-24 நாடுகளின் தலைமையிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருப்பது குறித்து வினவியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான நாணயப் பெறுமதி வீழ்ச்சி கண்டிருப்பது பொருளாதாரத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வல்ல. நாணயப் பெறுமதி இறக்கம் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிகழ்வு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டொலருக்கு நிகரான இலங்கை ரூபா சற்றுப் பலமடைந்து மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது எனவும் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment