Tuesday, September 4, 2018

அமைச்சர்களைத் தண்டிக்க அலரி மாளிகையில் மகிந்த வைத்திருந்த இருட்டறை ! இரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் !

September 04, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாகவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர்,

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அலரிமாளிகைக்குள் அரசியல்வாதிகள் பிரவேசிக்க அச்சம்கொள்வார்கள். ஆனால் அவர்களே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரிமாளிகை சிறப்பாக காணப்பட்டதாக தற்போது பெருமை பேசி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Battinews

0 comments:

Post a Comment