04.09.2018
எதிர்வரும் 2019 ஆம் வருடத்திற்கான வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் சம்மாந்துறைக் கல்வி அலுவலகத்தினால் தற்போது கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவுறுத்தல் கடிதம் சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தினால் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது.
*ஒரே பாடசாலையில் எட்டு வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இவ்விடமாற்றத்திற் கட்டாயம் விண்ணப்பிக்கவேண்டும்
*சுயவிருப்பின் பெயரில் இன்னுமொரு வலயத்திற்கு இடமாற்றம் பெறவிரும்பும் ஆசிரியர்கள் தாம் நியமிக்கப்பட்ட வலயத்தில் கட்டாய சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்.
* அத்துடன் விண்ணப்பத்துடன் முதல் நியமனக்கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்.என்றும் கேட்கப்பட்டுள்ளது.
*விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வலயக்கல்வி அலுவலத்தில் ஒப்படைத்தல் வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment