Thursday, August 16, 2018

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது


16.08.2018

உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்

சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

ஊடகப்பிரிவு

0 comments:

Post a Comment