06 JULY 2018
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் தங்கியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டிலேயே அதிகபடியாக ஆயிரத்து 520 ஏதிலிகள் தாயகம் திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக 'பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வருடம் மே மாதம் வரையிலான காலப்பகுதியினில் 557 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட வன்செயலை அடுத்து கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது, இந்தியாவின் 24 மாவட்டங்களில், 107 ஏதிலி முகாம்களில் 61 ஆயிரத்து 422 பேர் தங்கியுள்ளனர்.
இது தவிர, முகாமிற்கு வெளியே கடந்த ஏப்ரல் மாதம் வரை 35 ஆயிரத்து 316 பேர் வசித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சரின் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment