Sunday, July 8, 2018

கிழக்கில் பெரும் சோக சம்பவம்! அதிபர்,மாணவர் உட்பட நீரில் மூழ்கியதில் மூவரின் சடலம் மீட்பு !!

July 08, 2018
 
அம்பாறை பகுதியில் உள்ள எக்கல ஓயா கங்கையில் நீராட சென்ற 4 பேரில் 3 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர் உட்பட மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது படகில் சென்ற 9 பேரில் 5 பேர் அப்பகுதி மக்களால் 5 பேர் கைப்பற்றப்பட்ட நிலையில் மிகுதி 4 பேரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மதியம் 3 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

BattiNews

0 comments:

Post a Comment