22 JULY 2018
எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும் போக்குவரத்து கட்டண விலையில் மறுசீரமைப்பு செய்வதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் , குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்






0 comments:
Post a Comment