July 03, 2018
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்து பேசு பொருளாக மாறி பொதுமக்கள் மற்றும் அரசியல் பீடத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில்,
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு பிரதமர் ரணில் சற்றுமுன்னர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“மீண்டும் புலிகள் வேண்டும்” எனும் தொனியில் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் செய்த ராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரனுக்கு எதிரான விசாரணை நிறைவுபெறும் வரையில் அவர் வகிக்கும் அமைச்சுப் பதவியை பறிக்குமாறு பிரதமர் ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அமைச்சர் விஜயகலாவின் கூற்றானது பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் அரசுக்கும் அது சார்ந்த கட்சிகளுக்கும் பெருத்த இழப்பை சம்பாதித்து விடும் என்பதில் ஐய்யமில்லை.
இந்நிலையில்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்விலும் குறித்த சம்பவம் பெரும் அமளிதுமளியை கிளப்பிவிட்ட நிலையில் நாளை வரை பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
மடவளNews
0 comments:
Post a Comment