July 7, 2018
உலக கிண்ண கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்று சுவீடன். இந்த அணி அங்கீகாரம் பெறாத நிறுவனம் தயாரிக்கும் விளையாட்டு உபகரணங்களை விளம்பரம் படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தது.
ஆனால் சுவீடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. அப்போது இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
இதனால் சுவீடன் ஊடக மற்றும் விளம்பர விதிமுறையை மீறியதாக சுவீடன் கால்பந்து பெடரேசனுக்கு 71 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது பிபா.
இதை சுவீடன் கால்பந்து பெடரேசன் உறுதி செய்துள்ளது. பிபா இதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், நாங்கள் மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment