Wednesday, July 18, 2018

வாக்கு மூலம் சட்டமா அதிபருக்கு...

  18 JULY 2018 -

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் உயர் அதிகாரி ஒருவர் இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
& .விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் தற்போது வரையில் 25 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் ஆகியோர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், இன்று அல்லது நாளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment