July 07 2018
தென் ஆப்பிரிக்கா கவ்டெங் மாகாணத்திலுள்ள (Gauteng Province) கார்லிட்டன்வில்லே (Carletonville) என்ற ஊரில் நடைபெற்ற ஒரு கார் விபத்தில் அதில் பயணம் செய்த மூவரும் இறந்ததாக மருத்துவ துறையினரால் அறிவிக்கப்பட்டு அவர்களது உடல்கள் மார்ச்சுவரியில் (பிணவறை) உள்ள பிரிட்ஜூகளில் வைக்கப்பட்டன. இந்த விபத்து ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
மார்ச்சுவரி ஊழியர் ஒருவர் வழமையான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்த போது பிரிட்ஜூக்குள் வைக்கப்பட்ட பெண் ஒருவர் சுவாசித்துக் கொண்டு உயிரோடு இருந்தது தெரிய வந்ததையடுத்து மருத்துவமனையே அதிர்ந்து போயுள்ளது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவர்கள் என ஒருவருக்கொருவர் பழியை இன்னொருவர் மீது சுமத்திக் கொண்டிருக்க, அப்பெண் உறவினர்களோ 'மனித உயிரோடு விளையாடியதன் காரணம் என்ன? யார் பொறுப்பு?' எனத் தெரியாமல் இடத்தை விட்டு நகர மாட்டோம் என பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு இதுபோன்ற சம்பவங்கள் புதுசு அல்லவாம்... 2011 ஆம் ஆண்டு 50 வயது மனிதர் ஒருவர் ஈஸ்டர்ன் கேப் என்ற இடத்தில் பிணவறையில் கிடத்தப்பட்டு 24 மணிநேரம் கழித்தபின் எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாராம்,
2016 ஆம் ஆண்டு குவமாசு என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு விபத்தில் மரணமடைந்த ? ஒருவரும் உறவினர்கள் பார்க்கச் செல்லும் போது மரணப்படுக்கையிலிருந்து உயிருடன் எழுந்து அமர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆனால் உயிர்பிழைத்து எழுந்த 5 மணிநேரத்தில் மீண்டும் ஆவியை விட்டுவிட்டார்.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஸ்பெயின் நாட்டு ஆஸ்டுரியாஸ் பிராந்திய சிறைச்சாலை ஒன்றில் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக 3 மருத்துவர்கள் சத்தியம் செய்யாத குறையாக மரணச் சான்றிதழ் தர பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை 'கொத்துகறி' போடுமுன் உயிர்பிழைத்து சான்றிதழ் வழங்கிய டாக்டர்களுக்கு 'பெப்பே' காட்டியுள்ளார்.
சில நேரங்களில் உயிரும் விளையாடும்!
Source: BBC / The Independent
0 comments:
Post a Comment