Friday, July 6, 2018

அதைச்சொல்லி அழைப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது – நிசாம் காரியப்பர்


06.07-2018

இன்று கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா அவர்களுடன், நீர்வழங்கள் சபையில் வேலை செய்யும் ஒரு நண்பரும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம், அப்போது அந்த இடத்திற்கு வந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களை நோக்கி சட்டத்தரணி அன்சார் மௌலானா அவர்கள் சலாம் கூறிவிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் அவர்களே வருக என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த நிசாம்காரியப்பர் அவர்கள் எனது பெயரைச் சொல்லி அழையுங்கள் மௌலானா, கட்சியின் பொதுச்செயலாளர் என்று அழைக்காதீர்கள், அதைச்சொல்லி அழைப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார். அவருடைய இந்தப் பதிலானது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும் நிசாம் காரியப்பர் அவர்களின் இந்தப் பதிலில் ஆழ்ந்த உள்நோக்கம் உள்ளது என்பது மட்டுமல்ல, மு.காங்கிரஸின் முக்கிய பதவியிலிருக்கும் அவரின் உள்மனதிலே ஏதோ ஏமாற்றம் இருப்பதும் தெளிவாகின்றது.

ஆகவே மு.காங்கிரசிக்குள் மிச்சமாக இருக்கின்ற கல்முனைச்சேர்ந்தவரும், மறைந்த தலைவரின் சொந்தக்காரரும், படிப்பிலோ அந்தஷ்த்திலோ உயர்ந்த இடத்தில் இருக்கும் இவரும் ஓரம்கட்டப்பட்டால்…. கட்சிக்குள் இருக்கும் கிழக்கு மாகாணத்தின் பிடி இன்னும் தளருமா? அல்ல வளருமா? என்பது கேள்விக்குறிதான்.

Srilanka Muslim
நன்றி -
Mohamed Ibrahim

0 comments:

Post a Comment