July 22.2018
எதிர் வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி அமைப்பாளர்கள் நியமனம் இன்று ஞாயிறு 22 பொது ஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சஷிநியாஸ் அவர்களின் தலைமையில் இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டது
இதில் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எம் இர்ஷாத் (அதாப்)அவர்களுக்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்டத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிக்கான நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை ஏனைய பிரதேச சபைகள்ளான சம்மாந்துறை பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கரைப்பற்று மாநகர சபைக்குமான பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் நியமன பதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கட்சியின் நிர்வாக குழு தலைவர்களுக்குமான பதவிகளும் இளைஞர்கள் அணி தலைவர்களும் மற்றும் மகளிர் அணி தலைவிக்கும்மான பதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment