Sunday, July 8, 2018

உடனுக்கு உடன் விலையை மாற்றுவதன் மூலம் நட்டத்தை தவிர்க்க முடியும்..

, 08 JULY 2018

சர்வதேச எரிபொருள் மாற்றத்திற்கு அமைய எரிபொருட்களின் விலையை இலங்கையில் பேணுவது தொடர்பாக நிதி அமைச்சு தமது பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிகரிப்பு 12 மணி நேரத்தினுள் ரத்து செய்யப்பட்டதனை அடுத்து குழப்ப நிலை ஏற்பட்டது.

இப்படியான நிலைமையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த பரிந்துரைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் எண்ணெய் விலை மாற்றம் அடையும் போது, உடனுக்கு உடன் இலங்கை விலையையும் மாற்றுவதன் மூலம் நட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என கருதப்படுகின்றது.

அத்துடன், எரிபொருள் சூத்திரத்தை வாராந்தம் மாற்றியமைப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

Hiru

0 comments:

Post a Comment