Sunday, July 8, 2018

பள்ளியில் திருடியவன் உள்ளேயே மாட்டினான்

08.07.2018

மல்வான Raxapana Jumma Masjid பள்ளி முஅத்தினார் CCTV பதிவுகளைக் காட்டியபடியே கூறினார்.

“பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக சேகரிக்கப் பட்டிருந்த சிறிய உண்டியல்களில் மூன்றை வெட்டி யாரோ திருடி இருக்கிறார்கள். 03ந்திகதி இரவு 9மணியளவில் பள்ளிக்குள் ஒருவர் வந்து கதவைத் திறப்பது ரெகோர்ட் ஆகி உள்ளது”

பலத்த முயற்சியின் பின் ஆசாமியின் முகத்தை zoom செய்து பார்த்தோம். அறிமுகமில்லாத முகம். பள்ளியில் இருந்தவர்களை அழைத்துக் காட்டியதில் யாருக்கும் அடையாளம் விளங்கவில்லை.

போட்டோவை எடுத்து share செய்து ஆளைப் பிடிக்க ஏற்பாடு செய்தோம்.

மக்கள் கலைந்து சென்றனர். இறுதியாக ஆட்டோ ஓட்டுபவர் ஒருவர் வீடு செல்ல தயாரான போது ஒரு மாணவன் ஓடி வந்தான்

“இப்ப ஸ்க்ரீன்ல பார்த்த மாதிரி ஆள் ஒருவர் டொய்லட்ல இருந்து வெளியே வருகிறார்’

பள்ளி இமாமும் ஆட்டோ ஓட்டுனரும் ஆளை விசாரிக்க, ஆசாமி முரண்டு பிடிக்க ,அமுக்கி உள்ளே கொண்டு வரப்பட்டார்.

CCTV வீடியோவோடு நூறு வீதம் முகம் ஒத்துப் போக, கூடி இருந்தவரகள் கும்மி விளையாடியதில் கேடி ஒத்துக் கொண்டார்.

” உண்டியலில் 5,700/- இருந்தது.” ஒத்துக் கொண்டான்.

“டேய் கலிமாச் சொல்லு பார்ப்பம்”

“மாலிக்கி யவ்மித்தீன். இய்யாக…”

கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு ஊரின் பெயர் சொன்னான். கையில் பச்சை குத்தியிருந்தான். கொழும்புத் தமிழ் நன்றாகப் பேசினான்.
முஸ்லிம் பெயர் ஒன்று சொன்னான்.

ருசி கண்ட பூனை. பகல் 1:15 மணியளவில் ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று மீண்டும் வந்திருக்கிறது

“திருடி 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கான். அவண்ட நேரம் அவனை CCTVல பார்க்கும் போதே அவன் வந்தது”

“ஹலால சம்பாதித்து மக்கள் பள்ளிக்குக் கொடுத்த பணம். அதுதான் அவனே வந்து மாட்டிக் கொண்டான்.”
-மக்கள் பேசிக் கொண்டார்கள்

கம்பிக்கு பின்னால் தம்பி இப்போ இருக்கிறார்.

தகவல்
Mohamed Nizous
Secretary
Raxapana Jumma Masjid


0 comments:

Post a Comment