Saturday, July 7, 2018

ஈரான் பாராளுமன்றத்தை தாக்கிய 8, IS பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

July 08, 2018 

ஈரான் பாராளுமன்றம் மீது தாக்குதல் - ஐ.எஸ். அமைப்பினர் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் தெஹ்ரான்:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத்  தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment