, 07 JULY 2018
அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், மத்தல சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டுத் திட்டமாக முன்னெடுக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையம் தொடர்பில் எதிர்வரும் 6ஆம் திகதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து எமது செய்திச் சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் தொடர்பில் அரசாங்க மதிப்பீட்டாளர்களினால், மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால், 70 சதவீத நிதி அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதுடன், இலங்கையினால் எஞ்சிய 30சதவீத நிதி வழங்கப்பட்டு இந்தக் கூட்டுத் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதக நிலைமையை எட்டுமாயின், அது தொடர்பான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், உடன்படிக்கையை கைச்சாத்திட எதிர்ப்பார்ப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தப் பணிகள் இடம்பெற்றால், கட்டுநாயக்க விமான நிலையத்தைப் போல மத்தல விமான நிலையத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அதனூடாக பெறப்படும் லாபம் விகிதாசாரத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் பகிரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment