07.07.2018
அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன். – பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரிஸ் – கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை
மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படல் வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இல்லாவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு சுதந்திரமாக முன்னேறிச் செல்வதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமாகும். புதிய அரசியலமைப்பு இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றும் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இது இப்படியிருக்க, அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமாச் செய்வேன் என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானஎச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த போது கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் செயலகத்தில் கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி (2016-07-11) திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானஎச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்து அன்று தெரிவித்த்தாவது,
கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் பேசப்படுகின்ற போதிலும் இந்நாட்டில் 10 சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் எதுவும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
குறிப்பாக, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனைக் கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் மூச்சுக்கூட விடுவதாக இல்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் அபிலாஷைகளை குழிதோண்டி புதைக்க முடியாது. அரசாங்கம் நினைத்தால் ஓரிரு நாட்களில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியும். அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் 70 சதவீதமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்தும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படுகின்றனர்.
இது எமது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். அதனால் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன்.
பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை. என்று சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன். என்று ஆவேசமாகத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் இரண்டு வருடங்களை எட்டியும் இன்னும் கட்சித் தலைவரின் அனுமதியை கோரவில்லையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அது மாத்திரமல்லாமல் பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து தற்போது அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி ஏற்றிருப்பதை என்னவென்று சொல்ல முடியும் எனவும் மக்கள் வினவுகின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக குரல் கொடுக்கும் நிலையில் அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமாசெய்வேன் என்று ஆவேசமாக்க் கூறிய பிரதி அமைச்சர் இன்று மெளனமாகிப் போய் இருப்பதன் மர்மம்தான் என்ன என்றும் வினவப்படுகின்றது.
0 comments:
Post a Comment