Saturday, July 7, 2018

பலஸ்தீன் ஆதரவுப் போக்கினால் 11 ஆயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பாதிப்பு

July 7, 2018

இஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது.
இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர்.

இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது இரட்டைக் குடியுரிமையை மறுப்பதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இன்றைய சகோதர மொழி ஊடகமொன்று அறிவித்துள்ளது.

வன்னி இறுதி யுத்தத்தின் போது இஸ்ரேல் அரசு இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment