July 10, 2018
தரம் 10ல் முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களின் இரத்தத்தைப் பரிசோதனை செய்து தலசீமியா நோய் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்வதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர் திருமதி சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தலசீமியா நோய் பரம்பரை நோயாகும் என்பதால் இது தாய் அல்லது தந்தையின் இரத்தத்தின் ஊடாக பரவக்கூடியது. இந்த நோய் உள்ள ஆண்-பெண், திருமணத்தை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment