21.06.2018
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கத்திற்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எம்.எச்.எம்.ஹலிமுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அஞ்சல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு ஜூன் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மாத்திரமே வேதனம் வழங்கப்படும் என அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment