Thursday, June 21, 2018

மகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி யுவதியின் சடலம் கண்டெடுப்பு

June 21, 2018
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதியின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சவுதி அரேபிய பிரஜைகள் 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்து நேற்று விபத்து ஏற்பட்டது.

7 பேரில் 6 நபர்கள் நேற்றைய தினம் காப்பற்றப்பட்டதுடன், குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

0 comments:

Post a Comment