June 21, 2018
போலி ஆவணங்களை தயார் செய்து சந்தேகநபர் ஒருவருக்கு பிணைவழங்க மாளிகாகந்தை நீதிமன்றின் மேலதிக நீதவானை தூண்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கடுமையான வேலைகளுடன் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
மாளிகாகந்தை பொலிஸ் சாவடியில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 29,500 ரூபா அபராதம் செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி குற்றவாளிக்கு உத்தரவிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த வழக்கொன்றில் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக போலி மருத்துவ அறிக்கையை சமர்பித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தி சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெரணNews






0 comments:
Post a Comment