Sunday, June 10, 2018

இலங்கையின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை

10 JUNE 2018

நாட்டில் நிகழ்கால பொருளாதாரத்தில் தெளிவான மாற்றம் ஒன்று ஏற்பாடதவிடத்து, இலங்கையின் எதிர்காலம் கவலைக்குறியதாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கம் பெற்று கொண்ட கடனைவிட அதிக கடனை பெற்றுள்ளது.

மறுபுறத்தில் நாட்டின் சொத்துக்கள் கண்மூடித்தனமான முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் நாட்டின் உற்பத்தி துறை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தநிலை தொடரும்பட்சத்தில் நாடு எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment