Thursday, June 21, 2018

இலங்கைக்கு சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி!

21.06.2018

அம்பாந்தோட்டை துறைமுக சூழலில் இலங்கை கடற்படையினருக்கு இடவசதிகளை வழங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை பயன்படுத்த, துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் 52 மில்லியன் ரூபாவை குத்தகை தொகையாக வழங்குமாறு கோரி, இலங்கை கடற்படையினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என நல்லாட்சி அரசாங்கம் கூறினாலும் இறங்குதுறையை பயன்படுத்த 52 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அறிவித்துள்ளதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரை பயன்படுத்தி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக சீன நிறுவனம் கடற்படையினரிடம் குத்தகை பணத்தை கேட்டுள்ளமை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வின்

0 comments:

Post a Comment