21.06.2018
முல்லைத்தீவையும் திருகோணமலையையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்று அமைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.
இந்தச் செயற்பாட்டில் பங்கெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
மேலும், முல்லைத்தீவையும், திருகோணமலையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment