Monday, June 18, 2018

இலுமினாட்டிகளின் வீடு – BIGG BOSS

18.06 .2018

கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற கமல், இப்போதல்லாம் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு மார்க்கமாகவே பேசுகிறார். சென்ற முறை என்ரடமைன்ட் ஷோவாகப் பார்க்கப்பட்ட பிக்பாஸ், இம்முறை அரசியல் தாண்டவமாடப்போகிறது.

பெருந்திரையில் பேச முடியாத அரசியிலினை குறுந்திரையில் கொட்டி கும்மியடிக்கப் போகிறார். முறுக்கு மீசையும் ஐரோப்பிய பிளேய் ஆடையுடனும் அமர்க்களப்படுத்துகிறது கமலின் கண்கள். யஷிகா ஆனந்த், தாடி பாலாஜி, பொன்னம்பலம், மஹத், டானியல், வைஷ்னவி, ஜனனி, ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே, மமதி சாரி, நித்யா, ஷாரிக் ஹஸன், ஐஸ்வர்யா டுட்டா, சென்ராயான், றித்விகா, மும்தாஜ் என கலக்கலான செட். ஆனாலும் கமலுக்கு பிடித்த சமாச்சாரங்கள் நிறையவே பார்க்கலாம்.

மெஜாரட்டி வகையில் பெண்களே அதிகம். ஆண்களை கணக்கிட்டாலும் பொன்னம்பலம், ஆனந்த் வைததியநான் ஓல்ட் மேன்கள். தாடி பாலாஜிக்கு மிஞ்சியிருக்கின்ற கொஞ்ச நஞ்ச மவுசினைக் கூட காலியாக்கப் போகிறது பிக்பாஸ். சென்ராயன் மட்டும் வேற லெவலில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். மஹத், ஷாரிக் ஹஸன் டக்கெனத் தெரியும் வெளிச்சம்.

ஸ்பெஷலாக வீட்டின் உள்ளே ஒரு ஜெயிலும் புதிதாக முளைத்திருக்கிறது.

யார் யாரெல்லாம் உள்ளே அகப்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இலுமினாட்டி வேலைகளை பக்குவமாகத் தொடங்கி வைக்க கமல் தயாராகுகிறார்.

அவரது கண்கள் அதனை நிரூபமாகச் சொல்கின்றன.

நன்றி - அனுப்புனர்

Sajeeth Ahamed

0 comments:

Post a Comment