June 18, 2018
ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு.
நீங்கள் உண்மையை அறிய விரும்பினால்...
நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வுக்காகத்தான் இது பற்றி பேசுவதாக இருந்தால், இங்கு குறிப்பிடப்படும் தகவல்களை நாங்கள சொல்லும் அரச நிறுவனங்களுக்கு சென்று, உறுதிப்படுத்திவிட்டு இந்த தகவல்கைள மறுக்கவும்.
இல்லாத பட்சத்தில் நீங்கள் பொய்யர்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடுவீர்கள்.
இந்த தகவல் இலங்கை வானியல் அவதான நிலையத்திற்கு நேரடியாக சென்று பெறப்பட்டது.
14.06.2018
ரமழான் 28
(வியாழன்)
சூரியன் மறைந்த நேரம் 6.26 PM
சந்திரன் உதயமாகிய நேரம் காலை 6.14 AM
சந்திரன் அஸ்த்தமன நேரம் 7.06 PM
சுமார் 40 நிமிடம் இலங்கை வான்பரப்பில் ஷவ்வால் தலைபிறை தென்பட்டிருக்கிறது என்பது உறுதி.
இது வானியல் அவதான நிலையத்தின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை.
பிறைக்கொமிட்டியின் தலைவர் 25ஆம் நோன்பிலேயே உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரமழான் 28
14.05.208 வியாழன் மஹ்ரிப் இலங்கையில் பிறை காண்பது அசாத்தியம் அதற்கான வாய்ப்பு மிக அரிது என்று வானியல் சம்பந்தமான விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருப்பதாக கூறியிருந்தார்.
அந்த விஞ்ஞானிகளை பெயரை அல்லது தகவலை தந்தால் அந்த விஞ்ஞானிகளிடம் நேரடியாக சென்று தெளிவு பெற நாம் தயாராகவுள்ளோம்.
நீங்கள் உண்மையாளாராக இருந்தால், குறைந்தது அந்த விஞ்ஞானிகளின் பெயரையாவது வெளியிடுங்கள்.
எங்களுக்கு கிடைத்த திடுக்கிடும் மேலதிக தகவல்
14.05.2018 ரமழான் 28 வியாழன் மாலை இலங்கை வான்பரப்பில் தலைப்பிறை காண்பதற்கான அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை வானிலை அவதான நிலையத்திலிருந்து பிறை சம்பந்தமானவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஷவ்வால் தலைபிறை தொடர்பான இந்த தகவல்கள் உண்மையாகவே பொய்யென நீங்கள் நிரூபிக்க விரும்பினால், கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு
நேரடியாக சென்று அல்லது கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு பொய்படுத்துங்கள்.
இதற்கு பிறகும் நீங்கள் பிறை பார்த்தவர்களை, பொய்யர்கள் சதிகாரர்கள் என்று சொல்வதாக இருந்தால் கீழே உள்ள முகவரிக்கு சென்று அல்லது கீழே உள்ள இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திவிட்டு பொய்படுத்துங்கள் இல்லாவிட்டால், நீங்கள் பிறை கண்டவர்களை பொய்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு மாறு செய்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.
6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
383, Bauddhaloka Mawatha, Colombo 07 Sri Lanka
☎+94 11 269 4846
☎11 269 4847
☎11 268164
☎+94 11 269 8311
Jaffna muslim
-Fazal Deen-






0 comments:
Post a Comment