Thursday, December 20, 2018

தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார்

December 20, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று  வியாழக்கிழமை தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக, றிசாட் பதியுதீன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து, அமைச்சுக் கடமைகளை ஏற்றார்.

றிசாட் பதியுதீன் வசம் – முன்னர் இருந்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக, ‘நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்’ எனும் அமைச்சுப் பெறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்காக போராடி வரும் றிசாட் பதியுதீன், அந்த மக்களில் அதிகமானோர் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை பல்வேறு தடவை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துமிருந்தார்.

இந்த நிலையில் அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களைின் மீள்குடியேற்றக் கனவுகளை நிறைவேற்றுவதற்குரிய அமைச்சுப் பொறுப்பினை றிசாட் பதியுதீன் பெற்றெருத்திருப்து வரவேற்கத்தக்கதாகும்.

அமைச்சர் றிசாட் பதியுதீனும் வடக்கிலிருந்து முஸ்லிம்களைப் புலிகள் விரட்டியபோது, அகதியாக இடம்பெயர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி
– அஹமட்-

0 comments:

Post a Comment