Sunday, November 4, 2018

S.L.M.C., A.C.M.C .யின் 12 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் அரசாங்கத்துடன் இணையத் திட்டம்..?

November 04, 2018

அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டு கொடுத்து வரும் 12 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது .

இவர்கள் 5 பேரும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவிப்பதோடு , அமைச்சர்களாகவும் , பிரதியமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் எடுக்கக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தான்  இஸ்மாயில் , அலிசாஹிர் மௌலானா ஆகியோர் முதலில் றிசாத் ,ஹக்கீமை விட்டு வெளியேறி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட VC. இஸ்மாயில், பணத்துக்காக பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணையச் சென்ற போது , மகிந்த ராஜபக்ஷவினால் திருப்பி அனுப்பட்டமைக்க குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதூர்த்தீன் பெரும் அழுத்தங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் இவருக்கு பதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தது.

Ceylon 1ts News

0 comments:

Post a Comment