Saturday, November 17, 2018

நான் பிரதமரானால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்: சஜித்!

17.11.2018

நாட்டில் ஏலவே இரு பிரதமர்கள் இருக்கும் நிலையில் தன்னையும் பிரதமராக்கினால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் என தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்துள்ள போதிலும் அவரை மீண்டும் பிரதமராக அறிவிக்க முடியாது என மைத்ரிபால சிறிசேன அடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், மாற்றீடாக சஜித் பிரேமதாசவின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்து சஜித், தற்போது நடந்து கொண்டிருப்பது அரச பயங்கரவாதத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டம் எனவும் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment