November 17, 2018
அமெரிக்காவை சேர்ந்த பெண் பாகிஸ்தானுக்கு சென்று தன்னை விட 20 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மரியா ஹெலினா (41) என்ற பெண்ணுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த காசிப் (21) என்ற இளைஞருடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது.
நட்பானது மெதுவாக காதலாக மாற தொடங்கிய நிலையில் இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினர்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி மரியா பாகிஸ்தானுக்கு பயணித்தார்.
அங்கு காசிப், மரியா திருமணம் நடைபெற்றது.
இது குறித்து காசிப் கூறுகையில், எங்களின் வயது வித்தியாசம் குறித்து கேட்கிறீர்கள், காதலுக்கு வயது தடையில்லை.
திருமணத்துக்கு பின்னர் எங்கு வாழலாம் என மரியா என்னிடம் கேட்டார், அதற்கு நாம் இணைந்து இருக்கும் எந்த இடமாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment