10.11.2018
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண உயர் விருதான வித்தகர் விருதினை பெறும் இறக்காமம் ஜனாப் ஹாமித் லெப்பை அப்துல் சலாம் அவர்கள் 1941ம் வருடம் ஐப்பசி மாதம் நாலாம் திகதி பிறந்தார்.
இவர் இறக்காமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் சுமார் 45 வருடங்களாக இறக்காமம் பிரதேசத்தில் அண்ணாவியராக தொண்டாற்றி வரும் இவர் தனது தந்தையார், பாட்டனார். மாமனார் களிடமிருந்து இக் கலையில் பயிற்சி பெற்றதாக குறிப்பிடுகின்றார்.
இவர் குறிப்பாக மண மங்கல மாலை பாடல் பாடுதல் .புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி பாடுதல் மீலாதுந் நபி விழாக்களிலும் இசை கச்சேரிகளிலும் அரச தலைவர்களை வாழ்த்திப்பாடி பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் 2006 ஆம் ஆண்டு இறக்காமம் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கலாசார விழாவில் பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளார் அத்தோடு
2011ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தின நிகழ்வில் சிரேஷ்ட் பிரஜைகளை கௌரவிக்கும் கலாச்சார விழாவில் சான்றிதழ் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து
2012ஆம் ஆண்டு இறக்காமம் பிரதேச செயலகத்தினால் சிறந்த கவின் கலை பாடகருக்கான விருதும் 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய பக்தி பாடலுக்கான விருதும் இறக்காமம் பிரதேச செயலகத்தினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் 2014ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அரச கலாபூஷண விருதையும் பெற்றுள்ளார்.
இவரினால் பாடப்பட்ட கிராமிய சமயப் பாடல்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டது அதற்கு இஸ்லாமிய கவின் கலை பாடகர் என்ற பெயரை வைத்துள்ளதும் இங்கு குறிப்பிடக்கூடியது.
ஜனாப் ஹாமிது லெவ்பை அப்துல் சலாம் கடந்த 40 வருட காலத்திற்கு மேலாக கலைப்பயணத்தில் ஆற்றிய சேவையை பாராட்டி கலை இலக்கியத்தில் கிராமியக் கலை (பாடல் ) துறைக்கு வழங்கிய அற்பணிப்பு மிக்க பங்களிப்புக்காக கல்வி தொழில்நுட்பக் கல்வி முன்பள்ளி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் 2018ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவில்
கிழக்கு மாகாண வித்தகர் விருது 2018ல் வழங்குவதில் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது
0 comments:
Post a Comment