Sunday, November 4, 2018

மக்களின் மகிமை' ஆர்ப்பாட்ட பேரணி இன்று...

November 05, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள ´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி
இன்று மதியம் இடம்பெற உள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு .ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று மதியம் 12 முதல் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர, பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 1200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில், தியத்தஉயன மற்றும் பொல்துவ உள்ளிட்ட பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கடுவெல அத்துருக்கிரிய மாலபேக்கிடையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வேன்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment