09.11.2018
நாடாளுமன்றத்தை கூட்டுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் சர்வதேசத்தில் இலங்கைக்கு காணப்படும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியாவின் தூதுவர்கள் மற்றும் பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர், நோர்வே, சுவிஸ் நாட்டின் தூதுவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு தெரிவித்து வந்தபோதும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை 14 ஆம் திகதி கூட்ட முன்வந்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஸ்திரமற்ற நிலையை தீர்க்கும் பொருட்டு, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி அதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடரும் இந்த தாமதமானது இலங்கை மீது சர்வதேசத்தில் காணப்படும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் முதலீட்டு நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
JVP News
0 comments:
Post a Comment