Sunday, November 4, 2018

சற்றுமுன்னர் மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

04,11, 2018

மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்னர்.

இதன்டி, பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார பதவி ஏற்றுள்ளார்.

அதனுடன், ஊடகம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி(வடமேல்) பிரதி அமைச்சராக ஆர்.டி. அசோக பிரியந்த பதவி ஏற்றுள்ளார்.

0 comments:

Post a Comment