November 4, 2018
நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று (04) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் மக்களின் ஜனநாயக கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இங்கு கோசங்கள் முன்வைக்கப்பட்டன.
சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி இன்று செயற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், முகாமையாளர்கள், மாநகர பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தினை கூட்டி ஜனநாயக ரீதியான குரலுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த இந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டுமானால் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மைத்திரியே சீனிக்கும் டீசலுக்கும் வாக்களிக்கவில்லை, தீர்வுத்திட்டமே தேவை, மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி எமக்கு வேண்டாம், 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், உடன் பாராளுமன்றத்தினை கூட்டு சர்வாதிகாரத்தினை நிறுத்து போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
தெரண
(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)
தெரண
0 comments:
Post a Comment