11.11.2018
தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இருக்கும் அடுத்த சில நாட்கள் எம்மைப் பொறுத்தளவில் பெறுமதியானது.
வழமை போல இந்தப் பெறுமதியான நாட்களை வீணாக்கிவிட்டு, தெரிவுசெய்தால் சபை வரும் என்ற வழமையான பல்லவியைக் கேட்பதற்கு சாய்ந்தமருது மக்கள் இன்னும் முட்டாள்களல்ல.
அந்தப் பல்லவியை கடந்த மாநகர சபைத் தேர்தலோடு சாய்ந்தமருது மக்கள் மறந்துவிட்டார்கள்.
சபையோடு வந்து ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளிச்செல்ல வருவது யார்?
வெறும் வாக்குறுதிக்காக வாக்குகளை இனியும் தாரை வார்த்தால், கடந்த காலப் போராட்டம் பெறுதியில்லாததாகி விடும்.
அது எந்தக் கட்சியாகவும் இருக்கட்டும். இருக்கின்ற அடுத்த ஒரு சில நாட்களுக்குள் எங்களின் சபையைப் பிரகடனப்படுத்த முயற்சி எடுங்கள். உங்களைத் தோளில் சுமக்க நாங்கள் தயாராகிறோம்.
நகர சபை தான் முதல் இலக்கு.
அரசியல் அதிகாரம் இரண்டாம் இலக்கே.
குறிப்பு:
இந்த வரிகளை சிலரால் ஜீரணிக்க முடியாது என்பதும் தெரியும்.
# D N A
Kalmunai today
0 comments:
Post a Comment