November 9, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 6 பேரும் விமான படையினரின் உதவியடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த குளம் கடந்த இரு தினங்களுக்க முன்னர் உடைப்பெடுத்துள்ளது.
இதன்போது தோட்ட பாதுகாப்புக்காகச் சென்றிரந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெளியேறமுடியாத நிலையில் சிக்கி மரமொன்றில் ஏறி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உடனடியாக செயற்பட்ட விமான படையினர், குறித்த 6 போரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment