24.10.2018
பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலகடி சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப்பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதிதிட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில் இன்று ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நான்கு தினங்கள் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
அதன்போது அவரிடம் 33 மணித்தியாலங்கள் வரையில் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment