October 26, 2018
தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவால் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்தாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று காலை தெரிவித்தார்.
நேற்றைய தினம் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக கடமையில் உள்ள பொறியியலாளர் இன்று காலை தெரிவித்தார்.
நீர்மட்டம் உயர்ந்து நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகத் திறக்கப்பட கூடுமென்றும் பொறியிலாளர் யு.சந்திரதிலக குறிப்பிட்டார்.
இந்த வான்கதவுகள் மூலம் வெள்ளம் வழிந்தோடி கொத்மலை அணைக்கட்டிற்கு கீழே உள்ள நீரோட்டங்களில் சேரலாம். இதன் காரணமாக கொத்மலை ஓயா, மகாவலி நதி ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக உயரலாம். எனவே, நுகவெல, மஹவத்துர, உலப்பனை, கம்பளை, வெலிகல்ல கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை முதலான இடங்களில் வாழ்பவர்கள் நதி நீரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளர்.






0 comments:
Post a Comment