01.10.2018
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்பை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு கல்விசார்ந்த தேவையான விடயங்களை மாத்திரம் பெற்று கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செயற்பாட்டை திறம்பட செய்வதற்கான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment