Sunday, October 7, 2018

கூட்டணி அமைப்பது தொடர்பில் 9 ஆம் திகதி மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

October 7, 2018

முன்வைக்கப்பட்டுள்ள கூட்டணி அரசாங்க யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் வீட்டுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி இரவு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலில் கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம் இரவு இராப்போஷன விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குழுவினர் மஹிந்த ராஜபக்ஷ குழுவுடன் கூட்டரசாங்கம் அமைப்பது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன காரியாலயத்துக்கு நாளை  (08) ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தள்ளன.

0 comments:

Post a Comment