Friday, September 21, 2018

பிரசன்ன ரணவீர,விமல் வீரவன்ச ஆகிய இருவருக்கு பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ள தடை

  September 21, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர,விமல் வீரவன்ச ஆகிய இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களுக்கும், விமல் வீரவன்சவுக்கு இரண்டு வாரங்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ள து.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரினின் சர்ச்சைக்குறிய உரை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது, முறையற்ற விதமாக நடந்து கொண்ட குற்றத்திற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் தடை விதிப்பதற்காக இன்று பாராளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்ட யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment