Thursday, August 16, 2018

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ

August 17, 2018

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் எனவும், சட்டத்தில் மாற்றம் செய்து அவரையே நாட்டின் தலைவராக கொண்டுவருவோம் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாகவும் இதன் உண்மை நிலை என்னவென அவரிடம்   தனியார் வானொலிச் சேவையொன்று நேரடியாக கேட்டதற்கே அவர் இதனைக் கூறினார்.

0 comments:

Post a Comment