23.08.2018
இன்று இரவு வேளை வடமத்திய, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் நுவரெலிய மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடன் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதனுடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.






0 comments:
Post a Comment