JUNE 10, 2018
இப்படியும் இருக்கிறார்கள் நம்மவர்கள்…
இப்பாகமுவையில் அமைந்துள்ள Hotel New Lanka என்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடை இருக்கிறது.
கொழும்பிலிருந்து வருகின்ற பஸ் வண்டிகள் வழமையாக நாரம்மலையில் இரவுச் சாப்பாட்டிற்காக நிறுத்துவது வழக்கம்.
இன்று அவ்விடத்தில் வாகனம் நிறுத்த இடமில்லாததால், இந்த Hotel இல் நிறுத்தினார்கள். பயணிகளில் சிலர் வழமை போன்று தம்மோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பார்சலோடு உள்ளே போய் அமர்ந்தவுடன், அந்தக் கடையில் வேலை செய்கின்றவர்களும், அதன் உரிமையாளரும் அவர்களின் கடையில் எடுக்கும் சாப்பாட்டை மாத்திரம் தான் சாப்பிடலாம், வெளியே இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட விடாமல் வெளியேற்றிவிட்டார்கள்.
இப்தார் செய்தவர்கள் சாப்பிடப் போகிறார்கள் என்று கூட நினைக்காமல் இவர்கள் நடந்து கொண்டது மிகவும் மோசமான செயலாகும்.
வழமையாக அவர்கள் அனுமதிக்காதிருந்தாலும், நோன்பு காலத்தில் இவ்வாறு நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.
மாற்று இன சகோதரர்களின் கடைகளில் கூட இவ்வாறு நடந்துகொள்ளமாட்டார்கள். இத்தகைய ஒரு சிலர் இருப்பதால் தான், எமது நாட்டில் ஆங்காங்கே சர்ச்சைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
இந்தக் கடை அமைந்திருப்பது இப்பாகமுவ, பன்னல என்ற இடத்திலாகும்.
Kalmunai today






0 comments:
Post a Comment