June 19, 2018
தெலுங்கில் முன்னனி தொகுப்பாளராக இருந்த தேஜஸ்வானி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அதிகளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவங்களே சினிமா வட்டாரங்களில் ஆறாத வடுவாக இருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் முன்னனி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தேஜஸ்வினி. திருமணத்திற்கு பின் தொகுப்பாளர் பணியை விட்டு விலகினார். இந்நிலையில் இவர் சந்தேகத்திற்கு இடமான வகையில், தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வினி ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பவன் ஐடி துறையில் பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு தான் தேஜஸ்வினிக்கு குழந்தை பிறந்தது.
தேஜஸ்வினிக்கு குழந்தை பிறந்ததில் இருந்து, பவனின் தாயார் இவர்களுடன் தான், இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை Edupugallu கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் அறையில் மின்விசிறியில் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை அறிந்துக்கொண்ட அவரது பாட்டி கூச்சலிட்டதை தொடர்ந்து அயலவர்கள் இணைந்து அறையின் கதவை உடைந்து தூக்கிட்ட நிலையில் இருந்து தேஜஸ்வனியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது தேஜஸ்வனியின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
தேஜஸ்வனி கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் தற்கொலை தெலுங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






0 comments:
Post a Comment