21.06.2018
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் உத்தரவுக்கமைய கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் அவர்களினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளராக நிரந்தரமாக மீண்டும் கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்கள் அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளராக சென்ற 2018.06.19 ஆந் திகதி கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்தோடு அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளராக கடமையேற்றுக் கொண்ட ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளராகவும் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
அனுப்புனர்
Suhaib Umar Lebbe






0 comments:
Post a Comment