05.11.2018
நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்களின் பேரவை வருடாந்தம் நடைபெறும் நிலையில் இவ்வாண்டு சிறந்த சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டார் என்ற காரணத்திற்காகவும்
இறக்காமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பாறூக் சாஹிப் அவர்களுக்கு "தேசகீர்த்தி" விருது வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சென்ற 03 கொழும்பு 07 ஹெக்டர் கொபெகடுவ நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர்களினால் இவ் விருதுவழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு இவ் விழாவிற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஆகியோரும் பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புக்களின் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment